கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு : சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: சொத்து வரியை, ௨௦ ஆண்டுகளாக உயர்த்தாமல், உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளை பிடிக்கவே, அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக, சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

'பல ஆண்டுகளாக சொத்து வரி மாற்றி அமைக்கப்படாததால், உள்ளாட்சி அமைப்புகளிடம் போதிய நிதி இல்லை; மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியவில்லை' எனக்கூறி, சொத்து வரியை சீரமைக்கும்படி, அரசுக்கு நீதிபதி கிருபாகரன் தலைமையிலான, 'பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, குடியிருப்பு கட்டடங்கள், வாடகை கட்டடங்கள், வணிக கட்டடங்களுக்கு என, சொத்து வரி நிர்ணயித்து, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.உயர்த்தப்பட்ட சொத்து வரியை, கட்டட உரிமையாளர்கள் செலுத்தி வந்தனர்.

ஆனால், சொத்து வரி உயர்வை திடீரென நிறுத்தி வைத்து, அரசு உத்தரவிட்டது. இது, உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தது.அதைத்தொடர்ந்து, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' வரி உயர்வை நிறுத்தி வைத்தது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு, மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி நிர்வாக செயலர் ஆஜராகி பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது.வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ''அரசு பணியாக டில்லி செல்வதால், அதிகாரிகள் ஆஜராக அவகாசம் வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள், 'இந்த, 20 ஆண்டுகளில் நான்கு முறை, சொத்து வரியை உயர்த்தி இருக்க வேண்டும். மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், பதவிகளை பிடிக்க தான் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர். மாநகராட்சிகளில் மட்டுமே, சொத்து வரி உயர்த்தப்படவில்லை' என, கண்டித்தனர்.பின், அதிகாரிகள் இருவரும், வரும், ௧௮ம் தேதி ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X