பொது செய்தி

தமிழ்நாடு

குளிர் குறைந்தது: வெயில் அதிகரிப்பு

Added : பிப் 13, 2020
Advertisement

சென்னை: குளிர் காலம் முடிவுக்கு வருவதன் அறிகுறியாக, மாநிலம் முழுவதும் குளிரின் அளவு குறைந்து, வெயில் அதிகரித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், டிசம்பர் முதல் குளிர் காலம் நிலவுகிறது. இரண்டு மாதங்களாக நிலவும் குளிர் காலம், இன்னும் இரண்டு வாரங்களில், முழுமையாக முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதன் அறிகுறியாக, மாநிலம் முழுவதும், குளிரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில், வெயிலின் அளவு அதிகரித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், அதிகபட்ச வெயில், 32 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்ந்துள்ளது. 'வரும் நான்கு நாட்களில், வானம் தெளிவாக காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெயில் அதிகரித்து, வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X