பொது செய்தி

தமிழ்நாடு

கடும் சரிவை நோக்கி இந்திய மிளகு விலை

Added : பிப் 13, 2020
Advertisement

கம்பம்: இறக்குமதியால் இந்திய மிளகு விலை கடும் சரிவை நோக்கி செல்கிறது. விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிளகு சாகுபடி பெரும்பாலும் ஊடுபயிராக மேற்கொள்ளப்படுகிறது. ஏலத்தோட்டங்களில் நிழல் தரும் மரங்களில் மிளகு கொடி படர விடப்பட்டிருக்கும்.மூணாறு அருகே ராஜாக்காடு, ராஜகுமார், பூப்பாறையில் தனியாகவும் இச்சாகுபடி நடைபெறுகிறது. வயநாடு மாவட்டத்திலும் அதிகம் சாகுபடியாகிறது.இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாவதால், மிளகு விலை இந்த சீசனில் கடுமையாக குறையத் துவங்கியுள்ளது. கிலோவிற்கு ரூ. 700 க்கு மேல் விலை கிடைத்து வந்தது.

தற்போது சராசரியாக கிலோவிற்கு ரூ. 340 முதல் ரூ. 370 வரை கிடைக்கிறது.இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ரூ. 310 க்கு கீழ் இறங்கியுள்ளது. இது விவசாயிகள், வியாபாரிகளை கடுமையாக பாதிக்கிறது. இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான டன் மிளகு, மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், ஆந்திரா மாநில துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிளகு வியாபாரிகள் கூறுகையில், 'வரி ஏய்ப்பு செய்து, வியட்நாம் நாட்டின் மிளகை, இலங்கை மிளகு என்று கூறி இறக்குமதி செய்துள்ளனர். வியட்நாம் என்றால் அதிக சுங்க வரி கட்ட வேண்டி வரும். இலங்கையுடன் இந்தியாவிற்கு வர்த்தக ஒப்பந்தம் இருப்பதால், வரி அதிகமாக கிடையாது. எனவே மோசடியாக இறக்குமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே மிளகு விலை குறைந்து வரும் நிலையில், இப்பிரச்னை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதில் மத்திய வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X