சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் துப்பாகியுடன் 2 கொள்ளையர் கைது

Added : பிப் 13, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 திருச்சியில் துப்பாகியுடன் 2 கொள்ளையர் கைது

திருச்சி: திருவெறும்பூர் அருகே, துவாக்குடி பகுதியில், டாஸ்மாக் கடையில் துப்பாக்கி காட்டி கொள்ளையடிக்க முயன்றவர்களை, போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவுப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு கடையை அடைக்கும் நேரத்தில், இரண்டு மர்ம நபர்கள் மதுபானம் கேட்டு தகராறு செய்ததோடு, ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடையில் இருந்த பணத்தை கேட்டுள்ளனர். பொதுமக்கள் வந்ததால், மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து, டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் முருகதாஸ் புகார்படி, துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

நேற்று அதிகாலை, துவாக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் படி பைக்கில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், போலீசார், அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மீனாட்சிநாதபுரத்தை சேர்ந்த டைசன், 28, திசையன்விளை ராதாபுரத்தை சேர்ந்த முருகன், 29, என்பது தெரிந்தது.கடந்த 2ம் தேதி பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஜாமினில் வெளி வந்த இருவர் மீதும், நாங்குநேரியில், நான்கு டாஸ்மாக் கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும், நேற்று முன்தினம் இரவு, துவாக்குடி அண்ணா வளைவில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது.மேலும், அவர்களிடம் இருந்த டூ - வீலர் மற்றும் ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி, ரெண்டு தோட்டாக்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nethiadi - Thiruvarur,இந்தியா
16-பிப்-202017:22:16 IST Report Abuse
Nethiadi RSS கயவர்களின் வேலை தான் இவர்களை உடனே அகற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X