பொது செய்தி

இந்தியா

ரூ.13க்கு குடிநீர் பாட்டில் கேரள அரசு முடிவு

Added : பிப் 13, 2020
Advertisement

திருவனந்தபுரம்: கேரளாவில், 1 லிட்டர் குடிநீர் பாட்டிலை, 13 ரூபாய்க்கு விற்பனை செய்ய, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 1 லிட்டர் குடிநீர் பாட்டில், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், குடிநீர் பாட்டில் விலையை குறைத்து விற்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பி.திலோத்தமன் கூறியதாவது:குடிநீர் பாட்டில்கள் அதிக விலையில் விற்கப் படுவதாக, பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. அதை கருத்தில்கொண்டு, விலையைக் குறைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 1 லிட்டர் குடிநீர் பாட்டிலை, 13 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான, அரசின் உத்தரவு, இரண்டு நாட்களில் வெளியிடப்படும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் பாட்டிலை, 11 - 12 ரூபாய்க்கு விற்க, மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், உற்பத்தியாளர்களும், வணிகர்களும் போராட்டங்களில் ஈடுபட்டதால், அந்த திட்டத்தை அமல்படுத்த முடியாமல் போனது. தற்போது, குடிநீர் பாட்டில், அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், அதன் விலையை மாநில அரசே நிர்ணயிக்கும். இனி உற்பத்தியாளர்களால், அதிக விலையில் விற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X