உ.பி.,யில் பஸ் - லாரி மோதி விபத்து: 14 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

Added : பிப் 13, 2020
Share
Advertisement
 உ.பி.,யில் பஸ் - லாரி மோதி விபத்து:  14 பேர் பலி; பலர் கவலைக்கிடம்

பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில், லாரி மீது, பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், 14 பேர் உயிரிழந்தனர்; படுகாயமடைந்த, 31 பேரில், பலரின் நிலைமை மோசமாக உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின், பிரோசாபாத் மாவட்டத்தில், ஆக்ரா - லக்னோ இடையிலான நெடுஞ்சாலை உள்ளது. அதில், நேற்று முன்தினம், டில்லியில் இருந்து சொகுசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. இரவு, 10:00 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், முன் சென்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சிக்கி, பஸ் பயணியர், 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்; மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, எட்டாவா பகுதியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சிலரின் நிலைமை மோசமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

.பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட, 'டுவிட்டர்' பதிவில் கூறியிருந்ததாவது:உத்தர பிரதேசத்தின், ஆக்ரா - லக்னோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து, என்னை வருத்தமடையச் செய்துள்ளது. அதில், பல பயணியர் உயிரிழந்தனர். இந்த நேரத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்குச் சென்று, நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X