நீதிமன்ற வளாகத்தில் குண்டு வீச்சு: 3 வழக்கறிஞர்கள் காயம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 நீதிமன்ற வளாகத்தில் குண்டு வீச்சு: 3 வழக்கறிஞர்கள் காயம்

லக்னோ: லக்னோவில் உள்ள ஒரு நீதிமன்ற வளாகத்தில், மர்ம நபர்கள், குண்டுகள் வீசி நடத்திய தாக்குதலில், மூன்று வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் லக்னோவில், ஜனவரி, 7ல், வழக்கறிஞர் ஷேகர் திரிபாதி, 32, ஐந்து பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். அதைக் கண்டித்து, இதர வழக்கறிஞர்கள், உ.பி., பார் கவுன்சிலுடன் இணைந்து, கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்களை பாதுகாக்க, சட்டம் இயற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், லக்னோ நீதிமன்றத்தில், மர்ம நபர்கள் சிலர், கையெறி குண்டு களை வீசி, நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், மூன்று வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இது குறித்து, லக்னோ வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலர் சஞ்ஜீவ் குமார் லோதி கூறியதாவது:நான், நீதித்துறை அதிகாரிகள் மீது, குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறேன் என்பதால், இந்த தாக்குதல், என்னை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. என் அலுவல் அறைக்கு வெளியே வீசப்பட்ட குண்டுகளில், ஒன்று வெடித்தது. இரண்டு குண்டுகள், வெடிக்காமல் செயலிழந்தன. என்னைத் தவிர, மேலும் இரண்டு வழக்கறிஞர்கள், இந்த தாக்குதலில் காயமடைந்தனர். நீதிமன்ற வளாகத்தில், எத்தகைய பாதுகாப்பு இருக்கிறது என்பதை, இந்த சம்பவம் காட்டுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X