பொது செய்தி

இந்தியா

இதய தேசம்...இனிய நேசம்!

Added : பிப் 14, 2020
Share
Advertisement
LoversDay,ValentinesDay,Feb14

காதல் என்ற காற்றை சுவாசிக்காதவர்களை எண்ணிவிடலாம். உடலுக்கு இதயம் போல, வாழ்க்கைக்கு காதல் உயிர் போல மதிக்கப்படுகிறது. ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, நிறத்தை கடந்து இரு இதயங்கள் இணைவதுதான் உண்மையான காதல். உலகம் முழுவதும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்., 14ல் 'காதலர் தினம்' கொண்டாடப்படுகிறது.

காதல் என்ற வார்த்தை மிக வசீகரமானது. காதல் என்று சொல்லும் போதே மனசெல்லாம் றெக்க கட்டி பறப்பது போல ஒரு உணர்வு தோன்றும். காதல் என்பது காற்றை போல. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது. கன்னம் சுருங்க காதலியும், மீசை நரைத்திட காதலனும் வாழ்வின் கரைகளை காணும் வரை தொடர்வதுதான் காதல் என்கின்றனர் கவிஞர்கள்.

காதலர்கள் மட்டுமின்றி திருமணம் செய்த தம்பதியர்களும் பரிசுகள், வாழ்த்து அட்டைகள் வழங்கி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.காதல் பற்றி தமிழ் இலக்கியங்களான திருக்குறள், குறுந்தொகை, ஐங்குறுநுாறு, புலவர்கள், கவிஞர்கள், தத்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிக்கின்றனர்.


எப்படி வந்தது:

'காதலர் தினம்' உருவான கதை சுவராஸ்யமானது. காதலர் தினத்துக்கு முன்னோடியாக கருதப்படும் பாதிரியார் வேலன்டைன் ரோம் சாம்ராஜ்யத்தை சேர்ந்தவர். 14ம் நுாற்றாண்டில் ரோம் அரசர் இரண்டாம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல் மற்றும் திருமணத்திற்கு தடை விதித்தார். இதனால் இளைஞர்கள் அதிகளவில் ராணுவத்தில் சேருவர் என்பது அவரது எண்ணம்.

இதனை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' இளைஞர்கள் கொண்டாட தொடங்கினர். 20ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில்தான் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது.


உண்மை அவசியம்:

இன்றைய காதலர்கள் வாழ்க்கை பற்றி எவ்வித தெளிவான கருத்தும் இல்லாமல் அழகு, பணம், வேலை போன்ற காரணங்களை பார்த்து அவசரப்பட்டு காதலில் விழுகின்றனர். பள்ளி மாணவர்கள் கூட காதலிப்பதாக கூறும் நிலை வந்து விட்டது. இது வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. தன்னை காதலிக்காத குற்றத்திற்காக பெண்ணிற்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கும் அவலமும் அரங்கேறுகிறது.

காதல் கைகூடவில்லை என தற்கொலை செய்பவர்களும் இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது. காதல் திருமணம் செய்தவர்கள் மட்டும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல. திருமணத்துக்குப் பின் காதலிப்பவர்கள் அதை விட அதிர்ஷ்டசாலிகள். உண்மையான காதல் எப்போதுமே அழகானது.

- இன்று காதலர் தினம்

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X