செய்தி சில வரிகளில்...

Added : பிப் 14, 2020
Advertisement
 செய்தி சில வரிகளில்...

சத்யா நாதெல்லா இந்தியா வருகைபு

துடில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, மூன்று நாள் பயணமாக, வரும், 24 முதல் 26 வரை, இந்தியா வருகிறார். டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் அவர், துறை சார்ந்த நிபுணர்கள், அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளதாகவும், வாடிக்கையாளர்கள், இளம் சாதனையாளர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து உரையாட உள்ளதாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ராணுவ ஹெலிகாப்டர் தப்பியதுரூப் நகர்: பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் இருந்து, பதான்கோட் நோக்கி நேற்று காலை ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது. அதில், மூன்று வீரர்கள் பயணித்தனர். திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பான் மஜ்ரா என்ற கிராமத்தில், ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது, உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளாக இருந்த ஹெலிகாப்டர், மயிரிழையில் தப்பியது.

சிறுமி, தாய் பலாத்காரம்: மந்திரவாதி கைது

ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள குடார் என்ற இடத்தை சேர்ந்த பெண்ணின் கணவர், உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நோயை குணப்படுத்துவதாக, மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த ஜகீர் கான் என்ற மந்திரவாதி உறுதி அளித்துள்ளார். இதையடுத்து, மந்திரவாதியும், அவரது நண்பரும், பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். குடும்பத்தினரை வேறொரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, அந்த பெண்ணையும், அவரது, 'மைனர்' மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தனர். மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்

.'டிவி' தொகுப்பாளர் கொலை

புதுடில்லி: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த, 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் அனிதா, 29. இவரது கணவர் ரவீந்தர் பால் சிங். இவர், கடந்த மாதம் 30ல், தனது மனைவியை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நண்பரின் உதவியுடன், அனிதாவை கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின், அனிதாவின் உடலை காட்டுப் பகுதிக்கு எடுத்து சென்று, எரித்தனர். தீயில் கருகிய நிலையில், அனிதாவின் உடலை போலீசார் மீட்டனர். அனிதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த ரவீந்தர், கொலை செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

காமுகனுக்கு 25 ஆண்டு சிறை

முசாபர்நகர்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரை சேர்ந்த, 5 வயது சிறுமி, 2013ல், தன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பகுதியை சேர்ந்த நபர், சிறுமியை கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கு, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X