ஒடிசா முதல்வர் சொத்து மதிப்பு ரூ.64.26 கோடி

Added : பிப் 14, 2020
Advertisement
ஒடிசா முதல்வர் சொத்து மதிப்பு ரூ.64.26 கோடி

புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொத்து மதிப்பு, 64.26 கோடி ரூபாய் என, அம்மாநில அரசின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒடிசா அமைச்சரவையில், அதிக சொத்து உள்ளவர்களில், நவீன் பட்நாயக் முதலிடம் பிடித்து உள்ளார். இவருக்கு, 2019, மார்ச் நிலவரப்படி, 62 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும், 63.64 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளன. ஒடிசா அரசின் வலைதளத்தில், 20 அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், விளையாட்டு துறை அமைச்சர், துஷார்கந்தி பெஹரா, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன், கடைசி இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X