நிர்மலாவுடன் வேலுமணி சந்திப்பு நிலுவை நிதியை வழங்க கோரிக்கை

Added : பிப் 14, 2020
Advertisement

தமிழக உள்ளாட்சித் துறைக்கு வழங்க வேண்டிய, நிலுவை நிதியை விரைந்து வழங்குமாறு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, நேற்று டில்லியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அதன் பின், அவர் கூறியதாவது:தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2017- - 18ம் நிதியாண்டு முதல், 2019 -- 20ம் நிதியாண்டு வரை, செயலாக்க மானிய தொகை, 2,029 கோடி ரூபாய். நடப்பு, 2019 -- 20ம் நிதியாண்டுக்கான அடிப்படை மானிய தொகை, 4,345 கோடி ரூபாய் என, மொத்தம், 6,374 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.

இந்த நிதியை விரைந்து தரும்படி வலியுறுத்தி, தமிழக முதல்வர் அளித்த கடிதத்தை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினேன். அதேபோல, அமைச்சர் ஹர்திப்சிங் பூரியை சந்தித்து, மேற்கு மண்டல தொழிலதிபர்களின் முக்கிய கோரிக்கையான, கோவையிலிருந்து டில்லிக்கு, காலை நேரத்தில் விமான சேவையும், கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி பன்னாட்டு விமான சேவையும் கேட்டு, முதல்வர் அளித்த கடிதத்தை தந்தேன்.ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமரைச் சந்தித்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2019 -- 20ம் நிதியாண்டுக்கான, இரண்டாவது தவணை தொகை, 2,939 கோடி ரூபாய். மத்திய அரசின் தொழிலாளர் ஊதியம் நிர்வாக மற்றும் செலவினம் தலைப்பின் கீழ், 609 கோடி ரூபாயும் தரும்படி, கோரப்பட்டது.மத்திய பட்ஜெட்டில், விவசாயம் குடிநீர் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ள முக்கிய திட்டங்கள் எல்லாவற்றையும், தமிழக அரசு விரைந்து செயல்படுத்தும்.இவ்வாறு, அமைச்சர் வேலுமணி கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X