செய்திகள் சில வரிகளில்

Added : பிப் 14, 2020
Advertisement
 செய்திகள் சில வரிகளில்

கோவா ஹோட்டலில் 30 பேர் கைது

பனாஜி: கோவாவில் கலங்குட் கடற்கரைக்கு அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நுழைந்த, 40 பேர் அடங்கிய கும்பல், அங்கிருந்தவர்களை மிரட்டி கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களை, அவர்கள், பிணைக் கைதிகளாக வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய, 30 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகளில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

இணைய சேவை திரும்பியது
ஸ்ரீநகர்: காஷ்மீரில், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் உடல்நலம் குறித்த வதந்திகள், சமூக வலைத் தளங்களில் பரவியதால், நேற்று முன்தினம் இரவு, அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், பதற்றம் சற்று தனிந்ததும், நேற்று பிற்பகல், 'மொபைல்' இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன

நட்டாவுடன் மனோஜ் திவாரி சந்திப்பு

புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, டில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி, டில்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இரண்டு மணிநேரம் நடந்த அந்த சந்திப்பில், கட்சியின் அனைத்து பொது செயலர்களும் உடனிருந்தனர். அதில், டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்தும், கட்சியின் வாக்கு வங்கி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ரயில்வே நடை பாலம் சரிவு
போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள ரயில்வே நிலையத்தில், நடை பாலத்தின் படிகள் இருக்கும் பகுதி சரிந்து விழுந்தது. அதில், எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், ஒருவரின் நிலைமை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த, போபால் ரயில்வே பிரிவு உத்தரவிட்டுள்ளது

பண தகராறால், 5 பேர் கொலை

புதுடில்லி: டில்லியின் பஜன்பூரா பகுதியில், பண தகராறு காரணமாக, மூன்று குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேரை, பிரபு மிஷ்ரா என்பவர் கொலை செய்தார். விசாரணையில், கொல்லப்பட்டவர்களின் உறவினர் மிஷ்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பண தகராறால், குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்ற சம்பவம், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X