பொது செய்தி

இந்தியா

பிரதமர் பற்றி விமர்சனம்: பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்

Added : பிப் 14, 2020
Advertisement

புதுடில்லி: சமூக வலைதளங்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பற்றி தரக்குறைவான விமர்சனங்களை பதிவிட்ட, ராஜ்யசபா பாதுகாப்பு அதிகாரி, பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் தலைமையில், பார்லிமென்ட் பாதுகாப்பு சேவை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில், துணை இயக்குனராக பணியாற்றிவர், உருஜுல் ஹசன். இவர், ராஜ்ய சபாவுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவர், சமூக வலைதளங்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் குறித்து, தரகுறைவான விமர்சனங்களை பதிவிட்டு வந்துள்ளார். இதையடுத்து, 2018, ஜூனில் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.விசாரணை அறிக்கை, ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், 'அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளிலோ, அரசியல் சார்புள்ள இயக்கங்களிலோ பங்கேற்க கூடாது. அரசுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவிக்க கூடாது. 'ஆனால், இதை மீறி, உருஜுல் ஹசல், பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்களை விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

'அதனால், அவரை பதவியிறக்கம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது' என, கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, உருஜுல் ஹசன், பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். 'ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இப்போது இருந்த பதவியை பெற முடியாது' என, ராஜ்ய சபா இயக்குனர். கே. சுதாகரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X