'இன்போசிஸ்' நாராயண மூர்த்தி மருமகன் பிரிட்டன் நிதியமைச்சர்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (38)
Advertisement
RishiSunak,British,FinanceMinister,Infosys,NarayanMurthy,இன்போசிஸ்,நாராயணமூர்த்தி,மருமகன்,பிரிட்டன்,நிதியமைச்சர்

லண்டன்: 'இன்போசிஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், 39, பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.





இதற்கு பிரிட்டன் ராணி எலிசபெத், நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, பிரிட்டன் அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்தபடியாக, மிக உயர்ந்த பதவியை வகிப்பவர் என்ற பெருமை, ரிஷிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது.

நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். 'கன்சர்வேடிவ்' கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார்.

ரிஷியை தொடர்ந்து, இந்திய வம்சவாளியைச் சேர்ந்த, எம்.பி.,க்களான, அலோக் சர்மா, சுயேல்லா பிராவெர்மன் ஆகியோருக்கும் பிரிட்டன் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
18-பிப்-202017:21:46 IST Report Abuse
Jaya Ram இப்போ தான் உச்ச கோர்ட் சொல்லிருச்சே இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லை என்று தகுதியுள்ளவர்களை அவ்விடங்களில் சேர்த்துக்கொள்ளலாம் என்று பிறகென்ன அதை விட்டுட்டு CAA, NPR, NCR, க்கு எதிரா கொம்பு சீவிக்கிட்டு இருக்கானுக திமுகவின் கைகுருவிகள்
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
17-பிப்-202007:34:02 IST Report Abuse
jagan அங்கேயும் ஆரியர்கள் தானா? -இப்படிக்கு வயித்தெரிச்சல் மற்றும் கும்பி கருகும் திருட்டு திராவிடர்கள்.
Rate this:
Share this comment
மணி - புதுகை,இந்தியா
17-பிப்-202012:11:21 IST Report Abuse
மணிதுரைக்கு நீயே காலமுக்கிவிட்டுக்கோ...இந்தப்பக்கம் வரவேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
15-பிப்-202002:12:53 IST Report Abuse
Murugan நம்மை ஆண்டவனுக்கு நாமே பட்ஜெட் போடப்போகிறோம் . ஆஹா ஆஹா ஆஹா ...…...…......…….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X