டில்லி தேர்தல் தோல்வி

Added : பிப் 14, 2020
Advertisement

புதுடில்லி: ''டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, பா.ஜ., தலைவர்கள் சிலரின் தரகுறைவான, வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களே காரணம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக் கொண்டுள்ளார்.

அமித் ஷா கூறியதாவது:டில்லி சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., தலைவர்கள் சிலர், தரக்குறைவாகவும், வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசினர். இதை, பா.ஜ., ஒரு போதும் ஆதரிக்கவில்லை; ஆதரித்ததும் இல்லை. ஆனால், இந்த பேச்சுக்கள் தான், டில்லியில், பா.ஜ., அடைந்த தோல்விக்கு காரணமாகிவிட்டது.டில்லி தேர்தலில், என்னுடைய கணிப்பு தவறாகிவிட்டது. ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி தேர்தலில் மக்கள் ஒட்டளித்தனர் என்பதை ஏற்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, என்னுடன் விவாதம் நடத்த நேரம் கேட்டு, என் அலுவலகத்துக்கு யார் வந்தாலும், மூன்று நாட்களில், அவருக்கு நேரம் கொடுக்கப்படும். மதத்தின் அடிப்படையில் நாட்டில் நடந்த பிரிவினைக்கு, காங்கிரஸ் தான் காரணம்.இவ்வாறு, அமித் ஷா கூறினார்.

''டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு, சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து அவர் கூறியதாவது:மத்தியில் ஆட்சியை, காங்கிரஸ் இழந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரசை சேர்ந்த சிலர், இன்னும் தங்களை மத்திய அமைச்சர்களாகவே கருதிக் கொள்கின்றனர். காங்கிரஸ்தலைவர்களின் செயல்பாடு களில் மாற்றம் ஏற்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை, ஓட்டுக்களை பிரிக்க, பா.ஜ., பயன்படுத்திக் கொண்டது.

ஆனாலும், டில்லி தேர்தல் முடிவு, பிரதமர் மோடி, அமித் ஷாவின் முகங்களில் விழுந்த அறை. டில்லி தேர்தல் முடிவு, கோவிட் - 19 வைரஸ் போல், காங்கிரசுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., பீஹார் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் மறைந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X