குடியுரிமை சட்ட போராட்டத்துக்கு தடை

Added : பிப் 14, 2020
Advertisement

பெங்களூரு: 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தடுக்க, 144 உத்தரவு விதிக்கப்பட்டது, சட்ட விரோதமானது' என, கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்பினர், டிசம்பர் 18ல் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்தனர். ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், நகர் முழுவதும், 144வது சட்டப்பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்தார்.'போராட்டம் நடத்துவது ஒவ்வொருவரின் உரிமை. எனவே, தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, ராஜ்யசபா காங்., - எம்.பி., ராஜிவ் கவுடா, ஜெயநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சவும்யாரெட்டி ஆகியோர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.'

விசாரணை நடத்திய நீதிமன்றம், விளக்கமளிக்கும்படி, மாநில அரசுக்கும், போலீஸ் கமிஷனருக்கும் நோட்டீஸ் அனுப்பிஇருந்தது. 'கலவரம் நடக்கக்கூடும் என உளவுத்துறை மூலம் தகவல் வந்ததால், பொது மக்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கையாக, தடை உத்தரவு பிறப்பித்ததாக, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இம்மனு, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையிலான முதன்மை அமர்வு முன், நேற்று, விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டதாவது:சில அமைப்பினருக்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு, ஒரே இரவில் எவ்வாறு ரத்து செய்ய முடியும்.

ஒவ்வொரு போராட்டமும் அமைதியை குலைக்கும் என்ற சந்தேகத்தின் கீழ் அரசு செயல்படுமா. இப்போராட்டத்துக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு, 144ன் கீழ், விதிக்கப்பட்ட தடை உத்தரவு சட்ட விரோதமானது. இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X