'கோவிட்-19' பாதிப்பு கப்பலில் சிகிச்சைக்கு சென்ற 218 பேரின் கதி என்ன

Added : பிப் 14, 2020
Advertisement
 'கோவிட்-19' பாதிப்பு கப்பலில் சிகிச்சைக்கு சென்ற 218 பேரின் கதி என்ன

மதுரை: ஜப்பான் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் ஒரே நாளில் 44 பேருக்கு 'கோவிட் - 19' எனும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதித்தோர் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.ஜப்பான் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 138 இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்து 711 பேர் உள்ளனர்.

தங்கள் நாட்டிற்குள் 'கோவிட் - 19' பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக நடுக்கடலிலேயே கப்பலை ஜப்பான் நிறுத்தியது. தங்களை சொந்த ஊருக்கு அழைத்துவர கப்பல் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கோவிட் - 19' பாதிப்பு இருப்பவர்களுக்கு கப்பலுக்கு வெளியே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்னொரு புறம் மின்னல் வேகத்தில் கொரோனா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கப்பல் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏழு நாளில் 174 பேருக்கு இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 44 பேருக்கு கோவிட் - 19' பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இதனால் பாதித்தோர் எண்ணிக்கை 223ஐ தொட்டுள்ளது.

மேலும் சில நாட்கள் கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும் என்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே ஜப்பான் நாட்டுடன் பேசி மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X