கொடைக்கானல் ஓட்டல் கலை நிகழ்ச்சி: உயர்நீதிமன்றம் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் ஓட்டல் கலை நிகழ்ச்சி: உயர்நீதிமன்றம் தடை

Added : பிப் 14, 2020
Share
 கொடைக்கானல் ஓட்டல் கலை நிகழ்ச்சி:  உயர்நீதிமன்றம் தடை



மதுரை: கொடைக்கானல்தனியார் ஓட்டல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதித்ததனி நீதிபதியின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தடை விதித்தது.

கொடைக்கானல் பூம்பாறையில் 'கிளப் இந்தியாரிசார்ட்ஸ் மற்றும் மெட்ரோ ஓட்டல்ஸ்' உள்ளது. இங்கு பிப்.,13 முதல் பிப்.,16 வரை இசை, கலை மற்றும் உணவுத் திருவிழா நடத்த கொடைக்கானல் போலீசார் அனுமதிக்க உத்தரவிடக்கோரி, ஓட்டல் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டது.தனி நீதிபதி,'அனுமதிக்கப்பட்ட குறித்த நேரத்திற்கு அப்பால் கலாசார நிகழ்ச்சி நடத்தக்கூடாது. மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உட்பட நிபந்தனைகளுக்குட்பட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை எதிர்த்து திண்டுக்கல் எஸ்.பி., தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: பூம்பாறை ஆனைமலை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் வருகிறது. வனப்பகுதிக்குள் அதிக மக்கள் கூடும் இம்மாதிரியான நடவடிக்கைகளை அனுமதித்தால் வன விலங்குகள், மருத்துவ தாவரங்களுக்கு இடையூறு ஏற்படும். இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது. பாதை தொடர்பாக வனத்துறை, ஓட்டல் நிர்வாகம்இடையே வழக்கு நிலுவையில் உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X