மங்கலம்பேட்டை;கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் நேற்று பெரியவடவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த சகாதேவன், 65, கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சகாதேவனை கைது செய்து, அவரிடம் இருந்த 6 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பெண்ணாடம்பெண்ணாடம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் நேற்று பகல் 1:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, பாசிக்குளம் கிராமத்தில் பாலு, 44, என்பவர் வீட்டின் பின்புறம் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, பாலுவை கைது செய்து, அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE