கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' இயந்திரங்கள் நிறுவ வேண்டும்

Added : பிப் 14, 2020
Advertisement

மதுரை: மதுரை அதலை புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்காக ரத்தத்தை சுத்திகரிக்க அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் இயந்திரங்களை நிறுவ வேண்டும்.

ஏற்கனவே தாலுகா மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள 'டயாலிசிஸ்' இயந்திரங்களை மேம்படுத்த வேண்டும். டயாலிசிஸ் பணிக்காக கூடுதல் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, 4 வாரங்கள் ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X