அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரசாந்த் கிஷோர் பணி: திமுக விளக்கம்

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
PrashantKishor,DMK,ipac,திமுக,பிரசாந்த்கிஷோர்,ஐபேக்

சென்னை: ''தி.மு.க.,வுக்கு, பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக தான் இருப்பார்; இயக்க மாட்டார்,'' என, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி செயலர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., கூறினார்.

சென்னை, அறிவாலயத்தில், அவரது பேட்டி: தி.மு.க., ஆட்சியில், 14.34 சதவீதமாக இருந்த நிதி நிலைமை, தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில், 10.49 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, 69 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், வருமானத்தில், 2.50 சதவீதம் முதலீடு செய்யப்பட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், 2 சதவீதம் மட்டும் முதலீடு செய்யப்படுகிறது.


latest tamil news2011ல், தி.மு.க., ஆட்சி முடியும் போது, தமிழக அரசின் மொத்தக் கடன், 1.02 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு குடிமகனுக்கான கடன், 14 ஆயிரம் ரூபாய். தற்போது, 3.59 லட்சம் கோடி ரூபாயாக மொத்த கடன் இருப்பபதால், தலைக்கு, 45 ஆயிரம் ரூபாயாக கடன் சுமை அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளாக, நிதி ஆலோசகராக இருந்த தலைமை செயலர் சண்முகம், தமிழக நிதி மேலாண்மையில் என்ன செய்தார்; இவர் ஏன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன், தி.மு.க., ஒப்பந்தம் செய்ததை எதிர்க்கிறார்; தி.மு.க.,விற்கு, பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக தான் இருப்பார்; இயக்க மாட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan.S - Chennai,இந்தியா
19-பிப்-202015:56:28 IST Report Abuse
Narayanan.S 2011 இல் உங்கள் குடும்ப சொத்து எவ்வளவு 2020 இல் எவ்வளவு முடியுமானால் விளக்கவும்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
17-பிப்-202019:02:30 IST Report Abuse
Poongavoor Raghupathy If Stalin is wise he must get out of politics and live happily with all the wealth looted by his father Karunanidhi. Because Stalin is sure to loose in coming election 2021 as people have understood the worth of DMK. Once DMK looses election in 2021 Stalin's image will be more shattered and stand up again will be more difficult for DMK. Already DMK has taken the help of P kisore's legs for support and 2021 DMK and Kishore will both fall down. Poor Kishore is getting huge payment from DMK but while drowning Kishore must know that DMK will take Kishore also and drown. Poor Kishore has come to a wrong place to drown.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-பிப்-202004:11:41 IST Report Abuse
meenakshisundaram 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் "தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு கொடுக்கப்போகும் தோல்வியினால் கண்டிப்பாக ஏழை சிரிக்கத்தான் போகிறான் ஏனென்றால் அவன்தான் 'இறைவன்'
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X