அரசியல் செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை அ.தி.மு.க., கோட்டை: பாண்டியன் எம்.எல்.ஏ., பேச்சு

Added : பிப் 14, 2020
Advertisement
 பரங்கிப்பேட்டை அ.தி.மு.க., கோட்டை:  பாண்டியன் எம்.எல்.ஏ., பேச்சு

பரங்கிப்பேட்டை:'பரங்கிப்பேட்டை ஒன்றியம் அ.தி.மு.க., வின் கோட்டையாக உள்ளது' என அ.தி.மு.க., மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில், 98 லட்சம் மதிப்பில், புதியதாக தரைப்பாலம் கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், சேர்மன் கருணாநிதி முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சிவஞானசுந்தரம் வரவேற்றார்.பூமி பூஜையை, அ.தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பேசுகையில், மீனவர்களின் வசதிக்காகவும், மாசிமக திருவிழாவின்போது, புதுப்பேட்டை கடற்கரைக்கு 100க்கும் மேற்பட்ட சுவாமிகள் வந்து செல்ல வசதியாக கடற்கரையோரம் 98 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்படுகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் அ.தி.மு.க., வின் கோட்டையாக உள்ளது'என்றார்.ஊராட்சி தலைவர் சித்ரா, மீனவரணி மாவட்ட செயலர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ரவி, ரங்கம்மாள், ஊராட்சி செயலர்கள் கண்ணன், குட்டியாண்டி, கிராம தலைவர் சுப்ரமணியன், முன்னாள் கிராம தலைவர் சேகர், தே.மு.தி.க., ஒன்றிய அவைத் தலைவர் ரவி, ஜெ., பேரவை ஜெய்சங்கர், முன்னாள் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் தமிழரசன், காத்தவராயசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X