பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்வு கூட்டம்

Added : பிப் 14, 2020
Share
Advertisement
 மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்வு கூட்டம்

புவனகிரி:மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்வுக் கூட்டம் மற்றும் நிரந்தர அடையாள அட்டையுடன் மத்திய அரசின் யு.டி., - ஐடி., வழங்குவதற்கான சிறப்பு முகாம் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுகதட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயனாளிகளிடம் விண்ணப்பத்தினை வழங்கி துவக்கி வைத்தார்.டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்து, பாதிப்பின் தன்மை குறித்து சான்று வழங்கினார். முகாமில் தகுதியானவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட்டது. பயனாளிகள் சிலர் உதவித்தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு அளித்தனர்.தாசில்தார் சாத்யன், சமூக நல பாதுகாப்பு தாசில்தார் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் தமிழ்ச்செல்வி, மண்டல துணை தாசில்தார் சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தி, செல்வலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X