டில்லி தேர்தல் தோல்வி: பா.ஜ., - காங்., சுயவிமர்சனம்

Updated : பிப் 15, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (6)
Advertisement
Delhi_Loss,congress,BJP,JairamRamesh,AmitShah,டில்லி,தேர்தல்,பாஜ,காங்கிரஸ்

புதுடில்லி: ''டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, பா.ஜ., தலைவர்கள் சிலரின் தரகுறைவான, வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களே காரணம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக் கொண்டுள்ளார்.

அமித்ஷா கூறியதாவது: டில்லி சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., தலைவர்கள் சிலர், தரக்குறைவாகவும், வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசினர். இதை, பா.ஜ., ஒரு போதும் ஆதரிக்கவில்லை; ஆதரித்ததும் இல்லை. ஆனால், இந்த பேச்சுக்கள் தான், டில்லியில், பா.ஜ., அடைந்த தோல்விக்கு காரணமாகிவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி தேர்தலில் மக்கள் ஓட்டளித்தனர் என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து, என்னுடன் விவாதம் நடத்த நேரம் கேட்டு, என் அலுவலகத்துக்கு யார் வந்தாலும், மூன்று நாட்களில், அவருக்கு நேரம் கொடுக்கப்படும். மதத்தின் அடிப்படையில் நாட்டில் நடந்த பிரிவினைக்கு, காங்கிரஸ் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


காங்.,கை தாக்கிய வைரஸ்:

''டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு, சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மத்தியில் ஆட்சியை, காங்கிரஸ் இழந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரசை சேர்ந்த சிலர், இன்னும் தங்களை மத்திய அமைச்சர்களாகவே கருதிக் கொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை, ஓட்டுக்களை பிரிக்க, பா.ஜ., பயன்படுத்திக் கொண்டது. ஆனாலும், டில்லி தேர்தல் முடிவு, பிரதமர் மோடி, அமித் ஷாவின் முகங்களில் விழுந்த அறை.

டில்லி தேர்தல் முடிவு, கோவிட் - 19 வைரஸ் போல், காங்கிரசுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., பீஹார் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் மறைந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
14-பிப்-202017:24:26 IST Report Abuse
Girija குரங்கும் இரண்டு பூனைகளும்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202019:55:28 IST Report Abuse
தமிழ்வேல் அய்யய்யோ, தலை வெடிச்சிடும் போல இருக்கே.... அதுலே, யாருங்க குரங்கு ?...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-பிப்-202017:23:43 IST Report Abuse
Endrum Indian முஸ்லீம் நேரு காங்கிரஸ் சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,' இந்தியாவின் மீது. இது எப்போ ஒழியுமோ அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்ததாய் எடுத்துக்கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
14-பிப்-202006:23:06 IST Report Abuse
blocked user பாஜக விசுவாசிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்போடவேண்டும். வெறுமனே விசுவாசியாக இருந்து பயன் இல்லை.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202019:54:09 IST Report Abuse
தமிழ்வேல் "பல இந்துக்கள் ஓட்டு போடா செல்ல வில்லை என்றிருந்தது."...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202023:45:09 IST Report Abuse
தமிழ்வேல் மீதியைக் காணோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X