ஏப்.1 முதல் கொடையில் பாட்டில்களுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.1 முதல் 'கொடை'யில் பாட்டில்களுக்கு தடை

Added : பிப் 14, 2020
Share

கொடைக்கானல்,: கொடைக்கானலில் ஏப்.,1 முதல் குடிநீர், குளிர்பான பாட்டில்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் பயண்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இதை தடுக்க,'மாசில்லா கொடைக்கானல்' எனும் தலைப்பில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில் அதிகாரிகள் தெரிவித்தது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக கொடையில் 5 லி., க்கு குறைவான குடிநீர், குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்படும். பிளாஸ்டிக் பாட்டிலை அப்புறப்படுத்த கிரஷர் இயந்திரங்கள் நிறுவப்படும்.

குடிநீர் தேவைக்கு ஏ.டி.எம்., குடிநீர் மையம் அமைக்கப்படும். பாட்டில்களுக்கு தடை ஏப்., 1 முதல் அமல்படுத்தப்படும். மீறுவோருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தடை உத்தரவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X