ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் பால்கோவா கடைகள், வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.இங்குள்ள பால்கோவா உற்பத்தி மற்றும் விற்பனை இடங்கள், அதனை சார்ந்தவர்களின் வீடுகளுக்கு, நேற்று காலை 11;00 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். அங்கு நடக்கும் உற்பத்தி மற்றும் விற்பனையை நேரடியாக கண்காணித்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். கீழரதவீதி, ஆண்டாள் சன்னதி, பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள கடைகள் என 4 இடங்களில், இரவு 10:30 மணியை கடந்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE