பொது செய்தி

தமிழ்நாடு

எள் சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனை

Added : பிப் 14, 2020
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் வட்டார விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;நிலத்தை ஆழ உழுது, கடைசி உழவின்போது, ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் மற்றும் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கலந்து இடவும். நிலத்தில் நீர் தேங்காதவாறு சமன் செய்திட வேண்டும். இதற்கு, பட்டம் - இறவை, மாதம் - தை, மாசி, ரகம் - டி.எம்.வி., 7, கோ1, வி.ஆர்.ஐ., (எஸ்.வி)2, டி.எம்.வி., 4 ஆகியவையாகும்.ஏக்கருக்கு 2 கிலோ விதைகள் தேவையான அளவு மணலுடன் கலந்து வரிசைகளில் விதைக்க வேண்டும். 1 அடிக்கு, 1 அடி பயிர் இடைவெளியிலும், 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைக்க வேண்டும்.ஏக்கருக்கு 2 கிலோ மாங்கனீசு சல்பேட் மணலுடன் கலந்து சீராக துாவ வேண்டும். தொடர்ந்து, விதைத்த 15வது நாளில், செடிக்கு செடி 15 செ.மீ., இருக்கும் வகையிலும், 30வது நாள் 30 செ.மீ., இடைவெளியிலும் பயிரை களைத்து விட வேண்டும்.மண் பரிசோதனை செய்து, அதற்குரிய ஆலோசனையின்படி உரமிடவும். ஏக்கருக்கு 600 பி.இ., ஆலக்குளோர் மருந்தினை விதைத்த 3ம் நாள் இட வேண்டும்.உயிர் நீர் ஏழாவது நாள், பூப்பதற்கு முன் 25வது நாள், பூக்கும் தருணத்தில், காய் பிடிக்கும் தருணத்தில் நீர் விட வேண்டும். அறுவடைக்கு பயிரின் வயதை பொறுத்து தண்டு மஞ்சளாவது, காய்கள் மத்தியப் பகுதி மஞ்சள் நிறமடைவது, கீழ் இலைகள் உதிர்தல் ஆகியவை அறிகுறிகளாகும். இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X