அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டப்பூர்வ நம்பிக்கையை பெறுங்கள் அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு வலியுறுத்தல்

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: 'குடியுரிமை திருத்த சட்டத்தால், எந்த பாதிப்பும் வராது என்ற, சட்டப்பூர்வமான நம்பிக்கையை பெற, தமிழக முஸ்லிம்கள் விரும்புகின்றனர். இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்' என, அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க., சிறுபான்மையினர் நலப்பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாநில செயலர் அன்வர்ராஜா, தலைமை வகித்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவை, இந்திய முஸ்லிம்களின் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் என நம்பும் வகையில், தமிழகத்தில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

'தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, விவாதிக்கவே இல்லை' என, பிரதமர் அறிவித்துள்ளார். 'தமிழகத்தில், முஸ்லிம்களுக்கு எந்த பதிப்பு வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வரும், துணை முதல்வரும் உறுதி அளித்துள்ளனர்.

எனினும், தங்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது என்ற, சட்டப்பூர்வமான நம்பிக்கையை பெற, தமிழக முஸ்லிம்கள் விரும்புகின்றனர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க, முதல்வரும், துணை முதல்வரும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை சட்டத்தால் அச்சப்பட்டுள்ள, முஸ்லிம் மக்களின் பிரச்னைக்கு, உரிய வழியில் தீர்வு காண உதவி செய்யாமல், இப்பிரச்னையை அரசியல் ரீதியாக ஊதி பெரிதாக்கி, அரசியல் லாபம் பெற துடிக்கும், தி.மு.க., தலைவர் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X