தமிழ்நாடு

கோடை காலத்தில் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது குறித்து ஆலோசனை

Added : பிப் 14, 2020
Advertisement

திண்டுக்கல் திண்டுக்கல்லில் கால்நடைகளை கோடை காலத்தில் வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது குறித்து, கால்நடை பல்கலை உதவி பேராசிரியர் ரம்யா ஆலோசனை வழங்கினார்.தமிழகத்தில் அடுத்த சில மாதங்களுக்கு கடுமையான வெயில் தாக்கம் இருக்கும். கோடையில் அதிக வெப்பம் காரணமாக மாடுகளுக்கு மூச்சு வாங்குதல், பால் உற்பத்தி அளவு குறைதல், கருவுறுதல் தடைபடுதல், உடல் எடை குறைதல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படும். உள்நாட்டு கால்நடைகளை விட, கலப்பின கால்நடைகள் அதிக வெப்பத்தால் பாதிப்படைகின்றன. அமைதியின்மை, வாய் வழியாக சுவாசித்தல், அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வியர்த்தல், குறைந்த இருதய துடிப்பு, குறைவாக உணவு உட்கொள்ளுதல், அதிகமாக தண்ணீர் குடித்தல், பால் உற்பத்தி குறைவது வெப்பத் தாக்கத்தின் அறிகுறிகளாகும். பாதுகாப்பு யோசனைஉதவி பேராசிரியர் கூறியது: கோடை வெப்பம் நேரடியாக கால்நடைகளை தாக்காதவாறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இயற்கை மற்றும் செயற்கை நிழல் அளித்தல், அடர்ந்த உயரமான நிழல் தரும் மரங்கள் கால்நடைகளை வெப்பத்தில் இருந்து காக்கும். அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் மட்டுமே மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டும். பகல், இரவில் குளிர்ந்த குடிநீர் கால்நடைகள் குடிப்பதற்கு கொடுக்க வேண்டும்.உச்சி வெயில் நேரங்களில் கால்நடைகளின் மேல் நீர் தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். பெருநெல்லிக்காய் வற்றல் ஒரு மாட்டிற்கு 50 கிராம் அளவில் ஊற வைத்து அரைத்து தீவனத்தில் கலந்து கொடுக்கலாம். 50 கிராம் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து தினமும் ஒரு வேளை வாய் வழியாக கொடுக்கலாம். தினமும் 2 மொந்தன் வாழைப்பழம், இரு கைப்பிடி அளவு அகத்தி கீரை கொடுப்பதன் மூலம் கால்நடைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம் என, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X