பொது செய்தி

தமிழ்நாடு

போலி நாட்டுக்கோழி முட்டை விற்பனை : திண்டுக்கல் மக்களே 'உஷார்'

Added : பிப் 14, 2020
Advertisement

திண்டுக்கல், திண்டுக்கல்லில் செயற்கை நிறமேற்றி போலி நாட்டுக்கோழி முட்டை விற்பனை அதிகரித்து வருகிறது.திண்டுக்கல்லுக்கு திருப்பூர், உடுமலை, நாகப்பட்டினத்தில் இருந்து முட்டை விற்பனைக்கு வருகிறது. சாதாரண கோழி முட்டை ஒன்று மொத்த வியாபாரிக்கு ரூ.3.50 முதல் ரூ.4 வரை, கடைகளில் ரூ.4.50 முதல் ரூ.5 நாட்டுக்கோழி முட்டை ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. சாதாரண முட்டையை விட, நாட்டுக்கோழி முட்டையில் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதன் மீதான கிராக்கி அதிகரித்து காணப்படுகிறது.அதே சமயம் நாட்டுக்கோழி முட்டைக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதை பயன்படுத்தி, சாதாரண முட்டைகளை, நாட்டுக்கோழி முட்டை என கூறி, சிலர் விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது.போலி முட்டை: சாதாரண கோழி முட்டையை, தேயிலை சாறு மற்றும் செயற்கை நிறமியில் மூழ்க செய்து, வெள்ளையான அதன் ஓட்டின் நிறத்தை நாட்டு கோழி முட்டை நிறத்திற்கு மாற்றி விடுகின்றனர். பின், அதனை நாட்டுக்கோழி முட்டை என்று கூறி அதிக விலைக்கும் விற்கின்றனர். உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்ததையடுத்து, சில கடைகளில் திடீர் சோதனையிட்டனர். அதில் நாட்டுக்கோழி முட்டை என விற்பனைக்கு வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான சாதாரண முட்டைகளை பறிமுதல் செய்தனர்.நியமன அலுவலர் நடராஜன் கூறியது: திண்டுக்கல்லில் போலி நாட்டுக்கோழி முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. மக்கள் தாங்கள் வாங்கும் முட்டை, நாட்டுக்கோழி முட்டை தானா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டும். நாட்டு கோழி முட்டை நிறம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலர் செயற்கை நிறமிகள் பயன்படுத்துகின்றனர். அதை சாப்பிடுவோருக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட வாய்ப்புண்டு, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X