கிரிமினல் வேட்பாளர்கள்; சுப்ரீம் கோர்ட், 'கிடுக்கி!'

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: 'தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் வலைதளங்களில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் பெருகி வருவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2018 செப்டம்பரில் முக்கிய உத்தரவுகளை
SC,SupremeCourt,CriminalCandidates,PoliticalParties,சுப்ரீம்கோர்ட்,கிரிமினல்_வேட்பாளர்கள்,அரசியல்கட்சிகள்,உச்சநீதிமன்றம்

புதுடில்லி: 'தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் வலைதளங்களில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் பெருகி வருவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2018 செப்டம்பரில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்கு விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களிலும் விளம்பரப்படுத்த வேண்டும். மேலும் கொடிய கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ளோர் பார்லி.யில் நுழைவதை தடுக்க சட்டம் இயற்றலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் விண்ணப்ப படிவத்தில் திருத்தம் செய்வது அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் கிரிமினல் வழக்கு விபரங்களை விளம்பரப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக 2018 அக்.10ல் ஆணை பிறப்பித்தது.

இந்த ஆணை சரிவர நடைமுறைப்படுத்தப் படவில்லை எனக் கூறி பா.ஜ. தலைவர் அஸ்வினி உபாத்யாயா உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கடந்த நான்கு பொதுத் தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அதிகரித்துள்ளது. தேர்தலில் ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் அவர் செய்த குற்றம் நீங்கிவிடாது. அதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் வலை தளங்களில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் வழக்கு நிலுவை விபரங்களை பதிவேற்ற வேண்டும்.

அத்துடன் அந்த விபரங்களை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் சமூக வலைதளங்கள் பத்திரிகைகள் மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும். இந்த விபரங்களை 72 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஒருவர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் அவர் எதற்காக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தையும் அரசியல் கட்சிகள் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்தற்கு அரசியல் கட்சிகள் கூறும் காரணங்கள் நியாயமானதாகவும் தகுதிக்கு உரியதாகவும் இருக்க வேண்டும். 'வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது' என்ற காரணம் மட்டுமே அவர் தேர்வுக்கு போதுமானதாக கருதப்பட மாட்டாது. அரசியல் கட்சிகள் இந்த உத்தரவுப்படி நடக்கவில்லை என்றாலோ அல்லது இந்த உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் செயல்படுத்த முடியவில்லை என்றாலோ இரு தரப்பினர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை தேர்தல் ஆணையம் கூறியதாவது: பார்லி.யில் 43 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது எரிச்சலாக உள்ளது. மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்த யோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். அரசியல் கட்சிகளின் வலைதளத்தில் வேட்பாளரின் கிரிமினல் வழக்கு விபரங்களை கட்டாயம் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் 'எந்த கிரிமினல் குற்றப் பின்னணியும் இல்லாத ஒருவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும்' என்ற பரிந்துரையும் ஏற்கப்படும். அதேசமயம் வேட்பாளரின் குற்றப் பின்னணி விபரங்களை வலைதளத்தில் வெளியிடாத அரசியல் கட்சிகளை 324வது சட்டப் பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்க முடியாது. அதற்கான சட்ட அதிகாரம் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


பா.ஜ., வரவேற்பு:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தேர்தல் ஜனநாயக நடைமுறையை மேலும் வலுவாக்கும். வாக்காளர்கள், ஒரு வேட்பாளரின் அனைத்து விபரங்களையும் ஆராய்ந்து, ஓட்டு போடும் முடிவை எடுக்க, இந்த உத்தரவு துணை புரியும்.

- நலின் கோஹ்லி, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,


மோடி மீது காங்., தாக்கு:

அரசியல் கட்சிகள், வேட்பாளரின் குற்றப் பின்னணி விபரங்களை கட்டாயம் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதே நாளில், பிரதமர் மோடியும், பா.ஜ.,வும், குற்றப் பின்னணி உள்ள 'பெல்லாரி' கும்பலை காப்பாற்றிய நிகழ்வும் நடந்துள்ளது. சுரங்கம், வனம் தொடர்பாக கிரிமினல் வழக்குகளை சந்தித்து வரும், ஆனந்த் சிங், கர்நாடகாவின் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், உச்ச நீதிமன்ற உத்தரவை, மோடி சுக்கு நுாறாக கிழித்து விட்டார். பிரதமர் மோடியும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், குற்றப் பின்னணி உள்ளவர்களை, எம்.எல்.ஏ., க்களாக மட்டுமின்றி, அமைச்சர்களாகவும் ஆக்குவோம் என்பதை செயலில் நிரூபித்து காட்டியுள்ளனர். அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு 'நோட்டீஸ்' அனுப்புமா?

- ரன்தீப் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர், காங்.,

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
14-பிப்-202022:24:47 IST Report Abuse
RajanRajan நீதிமன்றத்தால் கிங்க்பின் என்று குறிப்பிட்டுள்ளவனுக்கு நீங்க ஜாமீன் கொடுத்து அவன் ராஜ்யசபா வரை புகுந்து டீ ஆத்துறான். உங்க சட்டமும் தேர்தல் கமிஷன் கட்டமும் ஒன்னும் பண்ண முடியல்லே. அட போங்கப்பா போயி உங்க வீடு வேலைகளை பாருங்கப்பா. நாட்டிலே நடக்கிற அநியாயங்களை பார்த்தால் ஒரு ஜுட்ஜ் இல்லாம மொத்தம் பேரும் மயக்கமடிச்சு வுளொணும்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
14-பிப்-202020:41:05 IST Report Abuse
bal அப்புறம் எப்படி அஜித் பவார் மீதுள்ள வழக்குகள் திரும்ப பெறப்பட்டன...அப்போது எங்கே போனது இந்த உச்ச நீதி மன்றம்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-202019:48:45 IST Report Abuse
தமிழவேல் யோகிக்கும்தான்......
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-பிப்-202019:17:40 IST Report Abuse
Pasupathi Subbian வெற்று முழக்கம்.நடைமுறை படுத்த முயலுங்களேன். முடிந்தால்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X