ஓய்வூதியர்களே உயிர்வாழ் சான்றிதழ் கொடுங்க...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்களே உயிர்வாழ் சான்றிதழ் கொடுங்க...

Added : பிப் 14, 2020
Share
திண்டுக்கல், திண்டுக்கல் பி.எப்., ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வங்கி கிளைகள் மூலமாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) ஓய்வூதியர்களில் மின்னணு முறையில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யாதவர்களின் ஓய்வூதியப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ்,

திண்டுக்கல், திண்டுக்கல் பி.எப்., ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்றிதழை வங்கி கிளைகள் மூலமாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) ஓய்வூதியர்களில் மின்னணு முறையில் உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யாதவர்களின் ஓய்வூதியப் பலன்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., மற்றும் எச்.டி.எப்.சி., வங்கிகளில் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பித்து வருகின்றனர்.ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் அட்டை, அலைபேசியுடன் வங்கிகளின் கிளைகளை அணுகி உயிர்வாழ் சான்றிதழை புதுப்பிக்கலாம். மேலும் கைரேகை பதிவு செய்வதில் ஏதேனும் தொழில்நுட்ப சிரமங்கள் இருந்தால், உயிர்வாழ் சான்றிதழ் படிவத்தை வங்கி மேலாளரின் சான்றொப்பம் பெற்ற பின் மதுரை அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பி.எப்., அலுவலகத்தில் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். உயிர்வாழ் சான்றிதழை நவம்பர், டிசம்பரில் மட்டுமே சமர்ப்பிக்கும் நிலை இருந்தது. தற்போது எந்த மாதத்திலும் சமர்ப்பிக்கலாம் என, பி.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X