மதுபான விழிப்புணர்வு பிரசாரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுபான விழிப்புணர்வு பிரசாரம்

Added : பிப் 14, 2020
Share

திண்டுக்கல், திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் கலால்துறை சார்பில் மதுபானம், கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கலால் உதவி ஆணையர் கமலக்கண்ணன், மதுவிலக்கு டி.எஸ்.பி., பொன்னுச்சாமி, டி.எஸ்.பி., மணிமாறன், இன்ஸ்பெக்டர் கவிதா பங்கேற்றனர்.அதில், மதுபானம், கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். மேலும் நாடகம், கரகாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோட்ட கலால் அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X