ரயில் சேவையில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் சேவையில் மாற்றம்

Added : பிப் 14, 2020
Share
வடமதுரை :மதுரை கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணியால் திருநெல்வேலி - திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில் சேவையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பயணிகள் ரயில் பிப்.14, 17, 19, 21, 24, 26, 28 மற்றும் மார்ச் 2, 4 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் பிப். 15, 18, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளில் மதுரை கோட்டை எல்லைக்குள் 50 நிமிடங்கள் தாமதமாக

வடமதுரை :மதுரை கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணியால் திருநெல்வேலி - திண்டுக்கல் - மயிலாடுதுறை இணைப்பு ரயில் சேவையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பயணிகள் ரயில் பிப்.14, 17, 19, 21, 24, 26, 28 மற்றும் மார்ச் 2, 4 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் பிப். 15, 18, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளில் மதுரை கோட்டை எல்லைக்குள் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். எரியோடு, கரூர் வழியே இயக்கப்படும் திருநெல்வேலி - திண்டுக்கல் - ஈரோடு பயணிகள் ரயில் பிப்.29 வரை மதுரை கோட்டை எல்லைக்குள் 115 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.இதே போல், மதுரை - கோயம்புத்துார் பயணிகள் ரயில் பிப்.12 முதல் பிப்.29 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை - கோவை சிறப்பு பயணிகள் ரயில் திண்டுக்கல்லுக்கு காலை 7:30 மணிக்கு வரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X