போக்குவரத்திற்கு இடையூறாக மலைரோட்டில் வேலி அமைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

வடமதுரை :அய்யலுார் கோம்பையில் தார் ரோடு விளிம்பில் கற்கள் நட்டு வேலி அமைப்பதால் விபத்து அபாயம் உள்ளது. கோம்பையில் இருந்து 1.75 கி.மீ., ல் தெற்கு அண்ணாநகர் உள்ளது. இவ்விரு குக்கிராமங்களுக்கும் இடையே ஒரு கி.மீ.,க்கு தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 மீட்டர் ரோடு பட்டா நிலத்தில் இருப்பதாக கூறி ரோட்டின் விளிம்பு பகுதியில் கற்களை நட்டு வேலி அமைக்கும் பணியில் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். அதனால் அவ்வழியே கனரக வாகனங்கள் செல்கையில், பிற வாகனங்கள் வழிவிட்டு ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. சிறிது கவனம் தவறினாலும் கற்களின் மீது வாகனம் மோதி விபத்து ஏற்படும்.கிராமத்தினர் கூறுகையில், 'குக்கிராமங்களை இணைக்கும் ஏராளமான கி.மீ.,க்கு ரோடுகள் தனியார் பட்டா நிலங்களிலேயே செல்கின்றன. பொது நலன் கருதி ரோடு அமைத்த பின்னர் அடுத்த தலைமுறை வாரிசுகள் சில இடங்களில் இது போல் செயல்படுவதால் வீண் பிரச்னை, தகராறு ஏற்படுகின்றன. இந்த விசயத்தில் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X