நீர்நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஓவியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஓவியம்

Added : பிப் 14, 2020
Share
 நீர்நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஓவியம்

கொரட்டூர்:ரயில் நிலைய சுற்றுச்சுவரில், நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள், ஓவியங்கள் வரைந்தனர்.கொரட்டூர் ஏரியை, சுற்றுச்சூழல் சீர்கேட்டிலிருந்து, பாதுகாக்கும் வகையில், கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, ஏரியின் அருகில் உள்ள, ரயில் பாதை சுற்றுச்சுவரில், உரிய அனுமதி பெற்று, தனியார் பள்ளி மாணவர்கள், விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணியை முடித்துள்ளனர். மரம் நடுதல், நிலத்தடி நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தும் வகையில், 50க்கும் மேற்பட்ட ஓவியங்களை, மாணவ - மாணவியர் வரைந்துள்ளனர்.

அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஓவியங்களை வரைந்த மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் கல்வி நிலை குறித்து, அதில் பதிவிடப்பட்டுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X