பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் விழிப்புணர்வு முகாம்கள்

Added : பிப் 14, 2020
Advertisement

திண்டுக்கல், குரும்பபட்டியில் சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.சுகாதார துணை இயக்குனர் நளினி தலைமை வகித்தார். வட்டார மருத்துவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் போர்சியாரூபி, குழந்தைகள் அலுவலர் சியாமளா பங்கேற்றனர். அதில், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். டாக்டர் சிவசுப்ரமணி, குரும்பபட்டி ஊராட்சி தலைவர் முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி பங்கேற்றனர்.திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் கதிர்வேல் தலைமை வகித்தார். நடமாடும் நீதிமன்றம் நீதிபதி கார்த்திக், பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து பேசினார். 'சகி' சேவை மைய நிர்வாகி ஜான்சிராணி, ஒன் ஸ்டாப் சென்டரின் பணிகள், குழந்தை திருமண சட்டம், பெண்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து பேசினார். பேராசிரியர் பிரியங்கா நன்றி கூறினார்.---ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைத் திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு, குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஆரிஸ், குழந்தை நல அலுவலர் மெர்லின், தலைமையாசிரியர் மணிமேகலை பங்கேற்றனர். அதில் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X