பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி சுவரில் ஓவியம் தீட்டிய, 'பட்டாம் பூச்சிகள்'

Updated : பிப் 14, 2020 | Added : பிப் 14, 2020
Advertisement
 பள்ளி சுவரில் ஓவியம் தீட்டிய, 'பட்டாம் பூச்சிகள்'

மணலி புதுநகர்:'பட்டாம் பூச்சிகள்' அமைப்பினரால், மணலி புதுநகர், அரசு உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் சுத்தம் செய்யப்பட்டு, பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மணலி புதுநகர், அரசு உயர்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை சுத்தம் செய்து, விழிப்புணர்வு, கலாசார ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.இதில், தேனி மாவட்டத்தை தலைமையிட மாக கொண்டு செயல்படும், பட்டாம் பூச்சிகள் எனும் அமைப்பினர் பங்கேற்று, ஓவியங்கள் வரைந்தனர்.இவ்வமைப்பில், பெரும்பாலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் உறுப்பினராக உள்ளனர். அரசு பள்ளியின், 300 அடி நீளமுள்ள சுவற்றில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான, பொய்க்கால் குதிரை, மிருதங்கம், கோலாட்டம் உள்ளிட்ட படங்கள், தத்துரூபமாக வரையப்பட்டன.

வாடிவாசலில் இருந்து பீறிடும் காளையை, அடக்க முயலும் காளையர்கள் பற்றிய ஓவியத்தை, அச்சு அசலாய், ஆசிரியர்கள் வரைந்திருந்தனர். கோழி சண்டை, சிலம்பம் என, தமிழர் வீர விளையாட்டுகளை காட்சிபடுத்தும் ஓவியங்களும் இடம் பெற்றன.இதைத்தவிர, தண்ணீர் சிக்கனம், மின்சாரம் சிக்கனம், படிப்பறிவு, பள்ளி செல்வதன் அவசியம், குழந்தைகளை கவரும் கேளிக்கை சித்திரங்கள் ஓவியமாய் மிளிர்ந்தன.

குழுவினர், பள்ளி மாணவர்களுக்கு, ஓவியம் வரையும் நுணுக்கம் குறித்து, சொல்லிக் கொடுத்து, சில ஓவியங்களை வரையவும் அறிவுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில், பட்டாம் பூச்சிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகணேஷ், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இருதய மணி மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் என, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X