தகுதி நீக்க மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம்

Added : பிப் 14, 2020
Advertisement

பனாஜி: கோவாவில் தங்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவுக்கு பதில் அளிக்க பா.ஜ. சட்டசபை உறுப்பினர்கள் 10 பேருக்கு சபாநாயகர் அவகாசம் அளித்துள்ளார்.

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு 2019 ஜூலையில் துணை முதல்வர் சந்திரகாந்த் கவ்லேகர் உள்ளிட்ட சட்டசபை உறுப்பினர்கள் 10பேர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தனர்.

இதையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி கோவா சட்டசபை சபாநாயகர் ராஜேஷ் பட்னாகரிடம் காங். தலைவர் கிரிஷ் சோடன்கர் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ராஜேஷ் பட்னாகர் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது தங்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுவிற்கு பதில் அளிக்க சட்டசபை உறுப்பினர்கள் 10 பேர் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ராஜேஷ் பட்னாகர் ''அடுத்த விசாரணைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.

இது குறித்து கிரிஷ் சோடன்கர் கூறியதாவது: சமீபத்தில் சட்டசபை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு ஒன்றில் 'சபாநாயகரும் ஒரு கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் இதுபோன்ற பிரச்னையில் முடிவு எடுப்பதற்கான அதிகாரத்தை வரையறுக்க பார்லி.யில் சட்டம் இயற்ற வேண்டும்' என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை சுட்டிக் காட்டியதற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X