அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் தி.மு.க., அதிக வெற்றி: உதயநிதி பெருமிதம்

Added : பிப் 14, 2020
Advertisement
 கிராமங்களில் தி.மு.க., அதிக வெற்றி: உதயநிதி பெருமிதம்

நெய்வேலி:'உள்ளாட்சி தேர்தலில் 70 சதவிகிதம் வெற்றியடைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்' என தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நெய்வேலியில் தி.மு.க., மாவட்ட இளைஞரணியினரின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.கடலுார் மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் முன்னிலை வகித்தார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வரவேற்றார்.கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியதாவது; தி.மு.க., இளைஞரணி செயலராக நான் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகின்றது. இந்த பதவியில் நான் பொறுப்பேற்றபோது தமிழகம் முழுவதும் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தலைவர் ஸ்டாலின் கூறினார். விரைவில் இலக்கை எட்டுவோம். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். கிராமங்களில் நம் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் அதிக வெற்றிகளை பெற்றுள்ளோம்' என்றார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராசவன்னியன், வெங்கட்ராமன். நெய்வேலி நகர செயலர் பக்கிரிசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி ஸ்டாலின், ஒப்பந்த தொ.மு.ச., நிர்வாகி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X