கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்வான 41 பேருக்கும் பணி கொடுங்க மெட்ரோவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை: சென்னை மெட்ரோவில் 41 பேருக்கு வேலை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கு முன் 2013ம் ஆண்டு மெட்ரோ நிலைய கட்டுப்பாட்டாளர் ரயில் ஓட்டுனர் மற்றும் இளநிலை பொறியாளர்கள் பணிக்கு நடந்த தேர்வில் 350 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 233 பேருக்கு பணி வழங்கப்பட்டது.

இதில் '117 பேர் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டங்களில் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்' என மெட்ரோ நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது.இந்நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 2015ம் ஆண்டில் துவங்கப்பட்ட பின் திட்ட பணிகளுக்கு தனியார் ஒப்பந்ததாரரால் ஊழியர்கள்சேர்க்கப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டு பணிக்கு காத்திருந்தவர்கள் வேலை வழங்க மெட்ரோ நிர்வாகத்திடம்கோரினர்.
'வேலை உத்தரவாதம் மூன்றாண்டுகள் கடந்துவிட்டதால் காலாவதியாகிவிட்டது. பணி வழங்க முடியாது' என நிர்வாகம் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் 41 பேருக்கும் மெட்ரோ நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மெட்ரோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஒன்றறை ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.இந்த வழக்கில் தகுதி அடிப்படையில் 41 பேருக்கும் ஆறு வாரங்களுக்குள் உரிய பணி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X