பொது செய்தி

தமிழ்நாடு

பிறந்த நாள், திருமண வரவேற்பு விழா இனி மெட்ரோ ரயிலில் கொண்டாடலாம்

Added : பிப் 14, 2020
Advertisement

நொய்டா: உத்தர பிரதேசத்தில் இயங்கும் நொய்டா மெட்ரோ ரயில்களில் பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ளும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு இயங்கும் நொய்டா மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதன்படி பிறந்தநாள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு நிகழ்ச்சிகளை மெட்ரோ ரயிலில் நடத்தும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல் கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காகவும் இனி மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்த சேவையை பெற விரும்புவோர் 15 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யவேண்டும். அதிகபட்சமாக நான்கு ரயில் பெட்டிகள் வரை பதிவு செய்துகொள்ளலாம். அதிகபட்சமாக 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். அதைத்தவிர வரி பெறப்படும். மேலும் திரும்ப பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு தொகையாக 20 ஆயிரம் ரூபாயை செலுத்தவேண்டும். இந்த புதிய திட்டம் மக்களை கவரும் வகையில் இருக்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X