திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் :பணிகளை நிறுத்த தீர்ப்பாயம் உத்தரவு

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னை:'திருவொற்றியூரில், சுற்றுச்சூழல் அனுமதியின்றி, மீன்வளத்துறை அமைத்து வரும் மீன்பிடி துறைமுக பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

ராயபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்துள்ள மனு:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிலவி வரும் நெரிசலை குறைக்கும் வகையிலும், சூரை மீன், இறால் உள்ளிட்ட ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தவும், புதிய மீன்பிடி துறைமுகத்தை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக, திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் அருகே, இடம் தேர்வு செய்யப்பட்டு, 242 கோடி ரூபாய் மதிப்பில், ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தில், 500 முதல், 800 படகுகள் வரை நிறுத்தவும், 60 ஆயிரம் டன் மீன்களை கையாளும் அளவில், திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த துறைமுகம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கோரி, மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்துள்ளது. இந்த இரண்டு அனுமதி பெறும் முன், துறைமுக கட்டுமான பணிகளை, மீன்வளத்துறை துவங்கியுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறாத இத்திட்டத்திற்கு, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வழக்கு தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில், இத்திட்டத்திற்கு, இன்னும் சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கிடைக்காத காரணத்தால், துறைமுகம் கட்டும் பணியை, அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும்.

இது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் ஆகியோர் கொண்ட குழுவினர், நேரில் ஆய்வு செய்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வழக்கு விசாரணை, மார்ச், 26க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X