சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நவமணி எங்கே?

Added : பிப் 14, 2020
Share
Advertisement

சென்னை தலைமை நுாலகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன், நவமணி என்ற பெண் ஊழியர் பணியாற்றி வந்தார். நுாலகத்திற்கு வரும் வாசகர்களுடன் அன்பாக பேசி, அவர்கள் கேட்கும் புத்தகங்களை எடுத்துக் கொடுத்து உதவுவார்.

ஒரு புத்தகத்தை தேடி எடுத்து வைக்குமாறு, அவரிடம் கேட்டுக் கொண்ட நான், மறுநாள் வந்து வாங்கிக் கொள்வதாக கூறிச் சென்றேன்.மறுநாள் காலையில் நுாலகம் சென்று, நவமணி இருக்கிறாரா என தேடினேன். இருக்கையில் அவர் இல்லை.கொஞ்ச நேரம் கழித்து, மீண்டும் வந்த போதும், அவரை காணவில்லை. அங்கிருந்த மற்றொரு ஊழியரிடம், 'நவமணி எங்கே சார்...' என்றேன். அவர், 'வெளியே போயிருக்கிறார்; இப்ப வந்துடுவார்' என்றார்.

காத்திருக்க முடியாததால், வீட்டுக்கு சென்று விட்டேன். மறுநாள் காலை, நுாலகம் சென்ற போது, வேறொரு ஊழியர் இருந்தார்; நவமணியை காணவில்லை. 'நவமணி வந்தாச்சா சார்...' என்றேன். நிமிர்ந்து பார்க்காமலேயே அவர், 'அதோ அந்த மேஜையில கிடக்குது பாருங்க...' என்றார்.'என்ன சார் சொல்றீங்க' என்று அலறியபடி, அவர் காட்டிய மேஜைக்கு சென்று பார்த்த போது, 'நவமணி' என்ற பெயரில், அப்போது வெளியாகும் மாலை நேர இதழ் ஒன்று கிடந்தது.

அதைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு தாங்கலை. உடனே, வீட்டுக்கு வந்து, மனைவியிடம் சொல்ல, அவரும் நீண்ட நேரம் சிரித்து மகிழ்ந்தார். இப்போது நினைத்தாலும், அந்த நிகழ்வு எனக்கு சிரிப்பை வரவழைத்து விடும்!

என்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை - 95

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X