பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

Added : பிப் 14, 2020
Advertisement
 முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

கடலுார்:மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கலெக்டர் அன்புசெல்வன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2019-20ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.கலெக்டர் அன்புச்செல்வன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார்.இதில், கூடைப்பந்து, வாலிபால், கபாடி, ஹாக்கி, ஜூடோ, குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் இறகு பந்து ஆகிய குழும போட்டிகள் ஆண்களுக்கு 13ம் தேதியும், பெண்களுக்கு 14ம் தேதியும் நடக்கிறது. 14ம் தேதி தடகளம், நீச்சல் (இருபாலரும்) நடைபெறவுள்ளது. இதில், 1,537 பேர் கலந்து கொள்கின்றனர்.இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X