சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை

Added : பிப் 14, 2020
Advertisement

பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே திருமணமான வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் பழைய காலனியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் ராதாகிருஷ்ணன், 25. இவருக்கும் அரியலுார் மாவட்டம், முல்லையூர் செல்வம் மகள் சிவசக்தி, 20, என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. சிவசக்தி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 5ம் தேதி சிவசக்திக்கு சீர்கொடுத்து கணவன், மனைவி இருவரையும் உறவினர்கள் முல்லையூர் அழைத்துச் சென்றனர். 6ம் தேதி அங்கனுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிவசக்திக்கு தடுப்பூசி போட்டுவிட்டு, ராதாகிருஷ்ணன் மட்டும் வெண்கரும்பூர் வந்தார்.கடந்த 12ம்தேதி வீட்டில் தனியாக இருந்த ராதாகிருஷ்ணன் பூச்சிமருத்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X