சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலையிலேயே தண்ணியா?

Added : பிப் 14, 2020
Advertisement

சென்னையில் குடியிருந்த நாங்கள், என் கணவருக்கு, இப்போது, புதுச்சேரி என மாறி இருக்கும் அப்போதைய பாண்டிச்சேரிக்கு பணியிட மாற்றம் ஆனதால், அங்கு சென்றோம். கணவருக்கு வங்கியில் அதிகாரி பணி. அதனால், அதிகாலையிலேயே எழுந்து, தண்ணீர் குழாயில் தண்ணீர் அடித்து, பாத்திரங்களில் நிரப்பி, இருவரும் குளித்து முடித்து, சமையல் செய்து, 8:30 மணிக்குள் அவரை அலுவலகம் அனுப்பி விடுவேன்.

இதை பார்த்துக் கொண்டிருந்த, பக்கத்து வீட்டு பெண்கள் சிலர், ரொம்ப நாட்கள் கழித்து, 'காலையில, நாங்கள் எழும் முன், ௮:00 மணிக்கெல்லாம், உங்கள் வீட்டு மாடியில் துணிகளை காயப் போட்டு விடுகிறீர்களே...' என்றனர்.அவர்கள் என்னை பாராட்டியதை பெருமையாக நினைத்துக் கொண்டு, 'சென்னையில இருக்கும் போதும் சரி, இங்கேயும் சரி, காலையில் எழுந்ததும், தண்ணி அடிச்சு முடிச்சுடுவோம். அதன் பின் தான் வேறு வேலைகளை பார்ப்போம்...' என்றேன்.

அந்தப் பெண், எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள்.சில நாட்கள் கழித்து, பக்கத்து வீட்டில் வசிக்கும் இன்னொரு பெண் வந்து, 'நீங்க எவ்வளவு தான் பெரிய ஆபீசர் வீட்டுக்காரங்களா இருந்தாலும், இப்படியா, காலையிலேயே தண்ணி அடிப்பீங்க; அதையும், பெருமையாக வெளியே வேற சொல்றீங்க...' என மடக்கினார்.

'அய்யய்யோ நான் சொன்னது, குழாயை அடித்து, தண்ணீரை எடுப்பது பற்றிங்க; தப்பா புரிஞ்சுட்டீங்க...' என்றதும், அங்கு வந்த மற்ற பெண்களும், விழுந்து விழுந்து சிரித்தனர்.'இங்கே, தண்ணின்னா, மதுபானம் அருந்துவது என்று அர்த்தம்...' என, அவர்கள் சொல்ல, நானும் சிரித்து மகிழ்ந்தேன். இனிமேல், 'தண்ணி அடிக்க' என சொல்வதற்கு முன், 'குழாயில் தண்ணீர் அடித்து பிடிக்க' என, மாற்றி பேச வேண்டும் என, முடிவு செய்தேன்.

இரா.சந்திரவதனம்சென்னை - 11

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X