சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் ஆறு சவரன் செயினை 'அபேஸ்' செய்தவர் குறித்து விசாரணை

Added : பிப் 14, 2020
Advertisement

பெண்ணாடம்:பஸ்சில் வந்த பெண்ணிடம் ஆறு சவரன் செயினை 'அபேஸ்' செய்த மர்மநபர் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியலுார் மாவட்டம், ஆலத்தியூர் தனியார் சிமென்ட் ஆலை குடியிருப்பைச் சேர்ந்தவர் மணி, 45. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கவிதாவுடன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, மீண்டும் ஆலத்தியூர் வர விருத்தாசலம் செல்லும் பஸ்சில் வந்தனர். கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இரவு 8:00 மணியளவில் விருத்தாசலம் - திட்டக்குடி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி, இருவரும் பெண்ணாடம் வந்தனர்.அப்போது, பஸ்சை விட்டு இறங்கிய கவிதா ேஹன்ட் பேக்கை பார்த்தபோது, திறந்த நிலையில் அதிலிருந்த இரண்டு லட்சம் மதிப்பிலான 6 சவரன் செயின் காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து மணி கொடுத்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார், செயின் திருடிய மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X