பொது செய்தி

இந்தியா

டில்லி - மும்பை மின் சாலை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

Added : பிப் 14, 2020
Advertisement

புதுடில்லி: ''டில்லி - மும்பை விரைவு நெடுஞ்சாலையில் மின்சாலை அமைக்க முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்'' என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கில் நிதின் கட்கரி பேசியதாவது: டில்லி - மும்பை இடையே 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் 1320 கி.மீ. துாரத்திற்கு விரைவு நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு ஹெக்டர் 80 லட்சம் ரூபாய் வீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 16 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம்.

இத்திட்டத்தில் டில்லி - ஜெய்பூர் வரையிலான விரைவு நெடுஞ்சாலைப் பணிகள் வரும் தீபாவளிக்குள் முடிந்து வாகனப் போக்குவரத்து துவங்கும். முழு திட்டமும் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும்.

இந்த திட்டத்தில் எட்டு வழிப் பாதையில் வாகன போக்குவரத்து நடைபெறும். அதில் மின்சார வாகனங்களுக்கு என குறிப்பிட்ட துாரத்திற்கு இரு வழிப் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும். அவர்களுக்கு கொள்கை ரீதியான ஆதரவை அரசு வழங்கும்.

அத்துடன் அழுத்தப்பட்ட திரவ எரிவாயு உட்பட புதுப்பிக்கத்தக்க எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை தயாரிக்க முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும்.மின் வாகன பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X