ஆவினில் முறைகேடு : கமல் கட்சி குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆவினில் முறைகேடு : கமல் கட்சி குற்றச்சாட்டு

Added : பிப் 14, 2020
Share

சென்னை,: ''குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து ஆவின் நிறுவன பணி நியமனத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது என மக்கள் நீதி மையம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.மக்கள் நீதி மையம் கட்சியின் அறிக்கை:'
குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து ஆவின் நிறுவன பணி நியமனத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது ஊடக செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முட்டை முதல் அனைத்திலும் முறைகேடுகளின் மொத்த உருவமாக திகழும் அ.தி.மு.க. அரசு உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும். ஆவினில் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ துறையில் காலியாக உள்ள 1141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை வரும் 23ம் தேதி ஏழு நகரங்களில் நடத்த இருந்தனர். தற்போது அத்தேர்வு சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வரும் காலங்களில் தேர்வு முறையையும் இந்த அரசு தனியாருக்கு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X